United States Virginia change
Sri Lanka Breaking News
Sri Lanka parliament
vivalankaSri Lanka newsSri Lanka businessSri Lanka sportsSri Lanka technologySri Lanka travelSri Lanka videosSri Lanka eventssinhala newstamil newsSri Lanka business directory
vivalanka advertising
Menu
Stay Connected
facebooktwittermobile
Popular Searches
T20 World Cup
Sponsored Links
Sri Lanka Explorer

Tamil:

Oct 12, 2016 6:38:19 AM - bbc.co.uk
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து கேட்டறிவதற்காக, அவர் சிகிச்சை பெறும் அப்போலோ மருத்துவமனைக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோர் இன்று வருகை தந்தனர்.
Oct 12, 2016 5:25:54 AM - bbc.co.uk
விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகில் ஓடும் பேருந்தில் பயணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Oct 12, 2016 5:29:03 AM - bbc.co.uk
சிரியாவில், ஐ.எஸ் அமைப்பிலிருந்து வெளியேறவர்களுக்கான முகாமை சிரிய கிளர்ச்சி குழுவான ஜெய்ஷ் அல் தஹ்ரிர் அமைத்துள்ளது என்று பி பி சி கண்டறிநதுள்ளது .
Oct 12, 2016 2:19:14 AM - bbc.co.uk
சமூக ஊடங்களில் ஆர்வலர்கள் மற்றும் அரச எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அமெரிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு உதவுவதாக குற்றம் சாட்டப்படும் சமூகக் கண்காணிப்பு நிறுவனம் ஒன்று , தங்களது தகவல் தளங்களை அணுகுவதை ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் தடை செய்திருக்கின்றன.
Oct 12, 2016 2:01:32 AM - bbc.co.uk
ஆஃப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் மசூதி ஒன்றில் அஷுரா பண்டிகையைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த ஷியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.
Oct 11, 2016 4:46:34 PM - bbc.co.uk
தங்களுடைய வழக்கமான காக்கி அரை கால்சட்டை சீருடையில் இல்லாமல், பளுப்பு நிறத்தில் முழு நீள கால்சட்டையோடும், முழுக்கை சட்டையோடும் அணிவகுத்து சென்ற ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்.) தன்னார்வலர்களிடம் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றத்திற்கு நாக்பூரின் கிழக்கிலுள்ள தெருக்களும், பாதைகளும் தான் சாட்சிகள்.
Oct 11, 2016 2:36:10 PM - bbc.co.uk
ரஷ்ய ஆதரவோடு அலெப்போவில் மேற்கொள்ளப்படும் வான்வழித் தாக்குதலை நிறுத்த, ஐநா பாதுகாப்பவையில் பிரான்ஸ் கொண்டு வந்த தீர்மானத்தை, ரஷ்யா வெட்டு அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்திருக்கும் நிலையில், அடுத்த வாரம் பிரான்ஸூக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்து செய்திருக்கிறார்.
Oct 11, 2016 4:53:53 PM - bbc.co.uk
புனித நாளில் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இரான் தேசிய கால்பந்தாட்ட அணி விளையாடிய உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் தென்கொரியாவை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.
Oct 11, 2016 2:19:10 PM - bbc.co.uk
குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளரான டிரம்ப், அவர் மீதான குடியரசு கட்சி உறுப்பினர்களின் தாக்குதல், போட்டியாளர் ஹிலரி கிளிண்டனை விட அதிக கஷ்டத்தை குடியரசு கட்சியினருக்கு உருவாக்கி இருப்பதாக தன்னுடைய சக குடியரசு கட்சியினர் மீது கடும் டிவிட்டர் தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ளார்.
Oct 11, 2016 5:22:22 PM - bbc.co.uk
சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமியை தாக்கிய விண்கல்லால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவு குறித்த, குறிப்பிடத்தக்க புதிய தகவல்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
Oct 11, 2016 5:10:03 PM - bbc.co.uk
தென் ஆப்ரிக்காவின் நிதியமைச்சர் மீதான மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Oct 11, 2016 4:01:06 PM - bbc.co.uk
ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஐ.எஸ். ஊடக விவரங்களின் எண்ணிக்கையில் ஒரு செங்குத்து வீழ்ச்சி ஏற்பட்டு, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவால் மேற்கொள்ளப்படும் பரப்புரையின் அளவில் சரிவு ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
Oct 11, 2016 12:56:36 PM - bbc.co.uk
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வகித்துவரும் இலாகாக்கள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Oct 11, 2016 9:04:04 AM - bbc.co.uk
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசின் காவிரி தொழில்நுட்பக் குழு கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் தனது ஆய்வை நிறைவு செய்து, இன்று டெல்லி புறப்பட்டது.
Oct 11, 2016 2:08:08 PM - bbc.co.uk
தெஹரானிலுள்ள அஸாடி விளையாட்டு மைதானத்தில் உலக கோப்பை தகுதி சுற்று விளையாட்டை தேசிய கால்பந்து அணி ஆட உள்ள நிலையில், இரான் ஷியா இஸ்லாமில் உள்ள துக்க நாளை அனுசரிப்பதற்காக, இரானின் அனைத்து செயல்பாடுகளும் ஏறத்தாழ நிறுத்தப்பட்டுள்ளன,
Oct 11, 2016 11:34:00 AM - bbc.co.uk
புற்றுநோய்க்கு பரவலாக அளைக்கப்படும் கீமோதெரபி சிகிச்சை பெற்றவர்களை விட இம்யுனோதெரெபி சிகிச்சை பெற்றவர்கள் நீண்டநாள் வாழ்வதாக ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன
Oct 11, 2016 11:21:53 AM - bbc.co.uk
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
Oct 11, 2016 11:56:55 AM - bbc.co.uk
இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுக்ரேனிடமிருந்து கிரைமியாவை கைப்பற்றி தன்னுடன் இணைத்துக்கொண்ட ரஷ்யா, தனது நாட்டுக்குள் கட்டப்பட்ட பாலங்களுக்கு இதுவரை செலவிடாத மிகப்பெரிய தொகையை இந்த பாலத்திற்காக செலவிட்டு வருகிறது.
Oct 11, 2016 8:31:00 AM - bbc.co.uk
கேலக்ஸி நோட் 7 செல்பேசிகள் திடீரென வெடித்து பாதுகாப்புக்கு அச்சுறுதலாக உள்ளதாகறு அறிக்கைகள் வெளிவந்திருப்பதால், அந்த வகை செல்பேசி தயாரிப்பை சாம்சங் நிரந்தரமாக நிறுத்தியுள்ளது.
Oct 11, 2016 8:48:11 AM - bbc.co.uk
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மூன்று இஸ்லாமியப் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். அலிகார் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில், மூன்று மாணவிகள் ஒரே சமயத்தில் வெல்வது இதுவே முதல் முறை.
Oct 11, 2016 9:30:17 AM - bbc.co.uk
சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தேசிய பிரச்சனையாகப் பிரகடனப்படுத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக, வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வவுனியாவில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப்பட்டுள்ளது.
Oct 11, 2016 7:37:50 AM - bbc.co.uk
இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Oct 11, 2016 8:41:22 AM - bbc.co.uk
உரிமம் பெறாத பாம்புப் பண்ணை ஒன்றிலிருந்து காணாமல் போன விஷதன்மையுள்ள நாக பாம்புகளில் ஒன்று, உள்ளூர் பண்ணை வீட்டில் இருந்தோரை பயமுறுத்தியுள்ளதால், 50 நாக பாம்புகளை பிடிக்க சீனாவின் கிழக்கு பகுதி அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Oct 11, 2016 9:19:36 AM - bbc.co.uk
பிலிபைன்ஸின் இந்த மாத இறுதிக்குள் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடைசெய்யும் திட்டம் ஒன்றை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Oct 11, 2016 7:46:54 AM - bbc.co.uk
இந்தூரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றியுள்ளது.
Oct 11, 2016 7:13:07 AM - bbc.co.uk
நடுநிலையாளர் என்று அடிக்கடி புகழப்பட்டாலும், சீன நீதிமன்றத்தின் சிறியதொரு ரகசிய விசாரணையை தொடர்ந்து பிரிவினைவாதி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்ற உய்கூர் இன பேராசிரியருக்கு உயரிய மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டுள்ளது.
Oct 11, 2016 8:01:56 AM - bbc.co.uk
இன்றிரவு தென் கொரிய அணிக்கு எதிராக ஈரானின் தேசிய கால்பந்து அணி விளையாடவுள்ள உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டம் இரானின் மதத் தலைவர்களுக்கு சில அசாதாரண சவால்களை அளித்துள்ளது.
Oct 11, 2016 7:45:30 AM - bbc.co.uk
தென் கொரிய கடற்படைக்கும் சீன மீன்பிடி படகுகளுக்கும் நடந்த சமீபத்திய மோதலை தொடர்ந்து, சீனாவுக்கு எதிராக அதிகாரப் பூர்வ எதிர்ப்பை தென் கொரியா பதிவுசெய்துள்ளது.
Oct 11, 2016 5:31:32 AM - bbc.co.uk
பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே நடந்ததாக கூறப்படும் ஒரு மோதல் குறித்து தான் செய்தி வெளியிட்டதால், தனக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு முக்கிய பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
Oct 11, 2016 3:30:14 AM - bbc.co.uk
கோபமாக அல்லது வருத்ததில் கடுமையான உடற்பயிற்சி செய்தால் ஒரு மணி நேரத்திற்குள் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது என்று ஒரு பெரிய சர்வதேச சுகாதார ஆய்வு கூறியுள்ளது.
1 2