எல்லையில் தவிக்கும் சிரிய அகதிகளுக்கு உதவி விநியோகம்: ஜோர்டான் ஒப்புதல்
ஜோர்டான் மற்றும் சிரியாவின் எல்லைக்கு அருகில் இருக்கும் ராணுவம் அற்ற பகுதியில் தவித்துக் கொண்டிருக்கும் சிரியா நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வழக்கமான உதவி விநியோகத்தை அனுமதிக்கப் போவதாக ஜோர்டான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.