மேட்டுப்பாளையம் விபத்து: 10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீண்டாமை சுவர் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, "சட்ட ரீதியாகவே இந்த விவகாரத்தை அணுக முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்." என்றார்.