தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னேறினாலும் சாதி, தீண்டாமை ஒழிப்பில் சறுக்கிவிட்டதா?
சில பின்தங்கிய மாநிலங்களில் இருக்கும் சில பிற்படுத்தப்பட்ட சாதிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் உள்ள சில தலித் சாதியினர் மேம்பாடு அதிகமாகவே உள்ளது. ஆனால், தமிழ்நாட்டிலேயே இருக்கும் சில பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சமூக - பொருளாதார வலிமையுடன் ஒப்பிடுகையில் தமிழக தலித்துகள் சமநிலையை இன்னும் எட்டவில்லை.