சௌதி அரேபியாவிடம் 'கால்பந்துக் கடவுள்' வீழ்ந்தது எப்படி?
சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக 36 வெற்றிகளைப் பெற்ற அர்ஜென்டினா அணி, 37-ஆவது வெற்றியைப் பெற்று இத்தாலி அணியின் முந்தைய சாதனையைச் சமன் செய்யும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. லியோனல் மெஸ்ஸி இருக்கும் அணி என்பதால் யாருக்கும் அந்த அணியின் வெற்றி மீது சந்தேகமே எழவில்லை.