தக் லைஃப்: கமல் பெயருடன் ஒட்டியுள்ள சாதி - தமிழ் சினிமா சூழலை சீர்கெடுக்கிறதா?
இயக்குநர் மணிரத்னம் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில் நாயகன் கமலின் பாத்திரம் தனது பெயரை சாதியுடன் கூறி அடையாளப்படுத்துவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேவர் மகன் சலசலப்பு இன்னும் ஓயாத நிலையில் கமலிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது தமிழ் சினிமாவின் சூழலை சீர்கெடுக்கிறதா?