News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியப் பெருங்கடலில் பிக்மி நீல திமிங்கலங்கள், பல தலைமுறைகளாக மனிதனின் கண்களில் படாமல் தான் இருந்து வந்தன. 2021 இல் ஆழ்கடலில் பிக்மி நீல திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் இவை குறித்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. அணு ஆயுதங்கள் என்றொரு விஷயம் இல்லாமல் இருந்திருந்தால் இவற்றை கண்டுபிடித்திருக்கவே முடியாது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா - துருக்கி உறவில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. அண்மையில் ஜி20 மாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கு துருக்கி எதிர்ப்பு தெரிகிறது. அது ஏன்? இந்தியா-துருக்கி உறவில் தொடரும் பின்னடைவுக்கு என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

Solo traveller-ஆக, தனியாகப் பயணம் செய்வது மிகவும் பிரபலமாகி வரும் இன்று, உங்களுக்கும் தனியாக பயணம் செய்ய பெரும் ஆவல் இருக்கும். அதே நேரத்தில் பயமும் இருக்கும். எப்படிப் போவது? எங்கு போவது? ஒரு solo traveller-ஆக, குறைவான செலவில் எப்படிப் பயணம் மேற்கொள்வது? இப்படிப் பலதரப்பட்ட கேள்விகள் எழும். இக்கட்டுரை இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடும் எனப் பேசப்படும் நிலையில், இந்த ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டிருப்பதுதான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்று, ‘இந்திய மறுமலர்ச்சியின் தந்தை’ என்று பல வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராய், மிகக் கொடூரமான பழமைவாதப் பழக்கமான ‘சதி’ எனும் உடன்கட்டை ஏறுதலை எதிர்த்தவர், பல சமூகச் சீர்திருத்தங்களுக்காகப் போராடியவர். ஆனால் அவரது கல்லறை இங்கிலாந்தில் இருப்பது ஏன் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு நாள், இரண்டு நாள் விடுப்பு கிடைத்தால்கூட குறைந்த பட்ஜெட்டில் எளிதாக சென்றுவரக்கூடிய பல சுற்றுலா தளங்கள் நம் தமிழ்நாட்டிலேயே, தமிழ்நாட்டைச் சுற்றியும் உள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அதிக வேகமான அரைச் சதம், அதி வேகமான சதம் என, டி20 போட்டியில் 300 ரன்கள் என நேபாள அணி படைத்த உலகச் சாதனைகள் கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்திருக்கின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கசப்புணர்வு தொடர்பாகப் பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவின் கருத்தை ஒட்டியே அவரது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், அவருடைய கூற்று கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

Soprano என்பது மேற்பத்தியச் செவ்வியல் சங்கீதத்தில் அதி உச்சஸ்தாயியில் பாடுவதைக் குறிக்கும். இந்த ஸ்தாயியை பெண்களால்தான் அதிகமாக அடைய முடியும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிந்திருக்கும் நிலையில், தமிழக அரசியலிலும் தேசிய அரசியலும் அதன் தாக்கம் குறித்தும் தி.மு.க. கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்தும், அடுத்து பா.ஜ.க. என்ன செய்யும் என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணனிடம் பிபிசி உரையாடியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாஜி படைப்பிரிவில் பணியாற்றிய ஒருவரை கனடா நாடாளுமன்றம் கௌரவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், பொது மன்ற அவைத் தலைவர் ரோட்டா, இது தெரியாமல் நேர்ந்த தவறு என மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும் அவர் பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியுள்ள நிலையில், கனடாவுக்கு வெளியில் இருந்தும் இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.நா. சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம் என்றும் அதனை காலவரையின்றி தள்ளிப் போட முடியாது என்றும் ஐ.நா. பொதுச்சபையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். இதுதவிர, கனடாவுக்கு மறைமுக பதிலடியை அவர் கொடுத்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது பற்றி கர்நாடக பா.ஜ.க. என்ன சொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா ஏழு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். அவரது இந்தப் பயணத்தின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் என்ன? இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் என்ன? இந்தியா பற்றி நேபாள பிரதமர் என்ன கூறினார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மின்சாரத்தில் இயங்கும் பேருந்து ஒன்று சென்னை அருகே தீ விபத்து ஏற்பட்டபோது தீயில் கருகிவிட்டது. அடிக்கடி இப்படி மின்சார வாகனங்களில் தீ பற்றுவது ஒருவித அச்சத்தை பயணிகளிடம் ஏற்படுத்தியுள்ளது. இதனால், இது போன்ற ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடாவில் இருந்து இந்துகளை வெளியேறக்கூறி மிரட்டியதா காலிஸ்தான் அமைப்பு? கனடாவில் வசிக்கும் இந்துகளுக்கு பாதுகாப்பு குறைபாடு இருக்கிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் 13 அடி நீள ராட்சத முதலைக்கு பெண் ஒருவர் இரையாகியுள்ளார். அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது? இது எப்படி வெளியே தெரியவந்தது? தீயணைப்புத் துறையினர் என்ன செய்தார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமூக தடைகளை மீறி தன்பால் ஈர்ப்பு காதலர்களான டிம்பிள் (27) மற்றும் மனிஷா (21) திருமணம் செய்துள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால், அவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்தத் திருமணத்தைச் செய்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெங்கு காய்ச்சல் என்பது பொதுமக்களை அச்சுறுத்தும் ஒரு விஷயமாகவே தொடர்ந்து வருகிறது. இதுவரை ஏன் டெங்கு வைரஸ் பாதிப்பைத் தடுக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இந்த கேள்விக்கு விடை காணும் முயற்சியில் பிபிசி தமிழ் இறங்கியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நிலாவின் தென்துருவத்துக்கு இந்தியா அனுப்பிய லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை 14 நாட்கள் உறக்கத்துக்குப் பின் மீண்டும் செயல்படத் தொடங்கும் என இஸ்ரோ எதிர்பார்த்தது. ஆனால், தற்போது அந்த நம்பிக்கை ஒவ்வொரு மணிநேரமும் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி முறிவால் தமிழ்நாட்டின் அரசியல் களம் எப்படி மாறும்? தி.மு.க. கூட்டணிக்கு இந்த முடிவு சாதகமா, பாதகமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காற்று மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை இன்று பலர் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த நிலையில் வீட்டு மின் கட்டணத்தை குறைக்கும் விதத்தில் காற்றாலை மின் உற்பத்தி சாதனத்தை வடிவமைத்து, அதை நிறுவியும் வருகின்றனர் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள். அவர்களின் 'சன் விண்ட்' ஸ்டார்ட் அப் நிறுவனம் எப்படி உருவானது? பட்டதாரிகளான இவர்கள் சாதித்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே கசப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளுடன் இந்திய உறவில் காலிஸ்தான் இயக்கம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டிம்பிள் ஜாட் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர், மணிஷா இந்து தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர். இருவரும் தங்கள் குடும்பத்தினரின் ஆதரவை பெற்றிருந்தாலும் குருத்வாராவில் நடைபெற்ற இந்த திருமணத்தால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கன்னியாகுமரி மாவட்டத்தில் 148 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ராஜகோபுரம் அமைக்க லாட்டரி சீட்டு விற்பனை மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளது. பக்கத்து கிராமங்களில் வசிப்பவர்கள் கூட இருந்த இடத்திலிருந்தே கோபுர தரிசனம் செய்யவேண்டும் என்பதற்காகவே மிக உயரமாக அந்த கோபுரம் கட்டப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக இந்த முடிவுக்கு வந்தது ஏன்? அதன் பின்னணியில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கணக்கு என்ன? பா.ஜ.க. என்ன செய்யப் போகிறது? இதனால் திமுகவுக்கு என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வைகை, நெல்லை, பாண்டியன், முத்துநகர், பொதிகை, போன்ற அதிவிரைவு ரயில்களில் இல்லாத அம்சங்கள் வந்தே பாரத் ரயிலில் இருப்பது என்ன? ஏன் வந்தே பாரத் ரயில் சேவை தென் தமிழகத்திற்கு முக்கியம் ?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணியை அதிமுக அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை அக்கட்சி அறிவித்துள்ளது. அது என்ன? அதிமுகவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், இந்தியாவுக்கு எதிரான கனடாவின் இந்த போக்கை உலக நாடுகள் ஆதரிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் நெருங்கிய கூட்டாளிகளே உடன் நிற்காததால் ஜஸ்டின் ட்ரூடோ தனித்து விடப்பட்டுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கான காரணங்கள் என்ன? இதைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc